வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே மீண்டும் இணைந்துள்ளார். இவர்களுடன் ஸ்ருதிஹாசன், மமிதா பைஜூ மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையை அனிருத் அமைக்கிறார்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தில் உலகளவில் பிரபலமான ராப் பாடகர் ஹனுமான் கைண்ட் ஒரு பாடலை பாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: “விஜய்யின் படமான ‘ஜனநாயகன்’க்காக ஒரு பாடலைப் பாடியுள்ளேன். இதுவரை தமிழ் சினிமாவுக்காக பாடாத எனக்கு இது ஒரு புதிய ஆரம்பம். எதிர்காலத்தில் மேலும் பல தமிழ் படங்களுக்கு பாடப்போகிறேன். மிகுந்த ஆச்சர்யங்கள் இதில் இருக்கின்றன,” என்றார். ஏற்கனவே அவர் பாடிய ‘பிக் டாக்ஸ்’ என்ற பாடல் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை கண்டது குறிப்பிடத்தக்கது.