பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். குறிப்பாக நடிகர் அஜித் நடித்த பல படங்களைத் தொடர்ந்து தயாரித்து வந்த அவர், தற்போது தனது கவனத்தை மீண்டும் பாலிவுட் திரும்பச் செலுத்தி, ‘நோ என்ட்ரி 2’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் வருண் தவான் மற்றும் அர்ஜுன் கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தச் சூழலில், போனி கபூர் தனது சமூக வலைதள பக்கங்களில் சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் பழைய தோற்றத்தைவிட உடல் எடை குறைந்து காணப்படுகிறார். 68 வயதான அவர், ஏறத்தாழ 26 கிலோ எடையை குறைத்துள்ளார். இதற்காக ஜிம்முக்கு செல்லாமல், வீட்டிலேயே உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு கடைப்பிடித்து இந்த ஃபிட்னஸ் வெற்றியை பெற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என் மனைவி ஸ்ரீதேவி எப்போதும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், முடி மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளவும் என்னை மோட்டிவேட் செய்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் அறிவுரையைப் பின்பற்றி நான் 14 கிலோ எடையை குறைத்தேன். பின்னர் என் தலையில் 6000 முடிகளை நட்டு செயற்கை முடி மாற்றும் செய்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.