நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்திற்கு ”மைசா” எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில், ராஷ்மிகா ‘மைசா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஆண்டி லாங் இணைந்திருக்கிறார். 2008 முதல் ஸ்டண்ட் இயக்குனராக செயல்பட்டு வரும் ஆண்டி லாங், இதுவரை தனது கெரியரில் 40க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். கல்கி 2898 ஏடி, லிகர், சனக் உள்ளிட்ட இந்திய படங்களிலும் இவர் பணியாற்றி இருக்கிறார். ராஷ்மிகா பாலிவுட்டில் ”தமா” என்ற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
