‘தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ நட்சத்திரம் ஜானி டெப் “ஹைட்” என்ற புதிய படத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் ‘ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆப் டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கிளாடியேட்டர் படங்களை இயக்கிய ரிட்லி ஸ்காட் இயக்குகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான உலகப்புகழ் பெற்ற ‘தி பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர்.
