Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

திரில்லர் கதையை கையில் எடுத்த பிரபல இயக்குனர் சீனு ராமசாமி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்மேற்கு பருவக்காற்று,” “நர பறவை,” “தரமதுரை,” “மாமனிதன்” ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமீபத்தில் அவர் இயக்கிய “கோழிப்பண்ணை செல்லதுரை” படம் வெளியாகியது. இதில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்த இப்படம், திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் தமிழுடன் சேர்த்து ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து சீனு ராமசாமி கூறும்போது, “கோழிப்பண்ணை செல்லதுரை’க்கு சரியான காட்சிகளும், திரையரங்குகளும் கிடைக்கவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் மக்களுக்கு இது சென்றடைந்தது. இவ்வகை சிறிய படங்கள் வெற்றி பெற்றால், நாவல்கள் மற்றும் சிறுகதைகளை படமாக்கும் இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள “இடி முழக்கம்” படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் கிராமப்புற பின்னணியில் திரில்லர் கதையாக ஒரு புதிய படத்தைத் தொடங்க உள்ளேன்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News