Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஓவியா நடிக்கும் ‘சேவியர்’… வெளியான கதாபாத்திர போஸ்டர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், பரபரப்பாக இருக்கும் நடிகை ஓவியா, 2019-ம் ஆண்டில் வெளியான 90 எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2 ஆகிய நான்கு படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு அவர் பெரும் வாய்ப்புகளைப் பெறவில்லை. ‘பூமர் அங்கிள்’ என்ற படத்தில் தனது பெயரான ஓவியா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘சேவியர்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை ‘அக்னி தேவி’ மற்றும் ‘ப்ரெண்ட்ஷிப்’ படங்களைத் தயாரித்த ஷான்டோவா ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்தை ஜான் பால்ராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஹர்பஜன் சிங் ‘டாக்டர். ஜேம்ஸ் மல்ஹோத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, ஓவியா ‘வர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜிபி.முத்து மற்றும் வி டி வி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். டி.எம். உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, மாணிக் இசையமைக்கிறார். மருத்துவமனையில் நடக்கும் திரில்லர் சம்பவங்களை மையமாகக் கொண்டு படமெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News