Touring Talkies
100% Cinema

Thursday, June 5, 2025

Touring Talkies

நடிகராக என்ட்ரி கொடுக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் சுகுமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2006ம் ஆண்டு வெளியான ‘கொக்கி’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சுகுமார். அதனைத் தொடர்ந்து அவர் ‘லாடம்’, ‘மைனா’, ‘தடையறத் தாக்க’, ‘கும்கி’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘தர்மதுரை’, ‘ஸ்கெட்ச்’, ‘மாமனிதன்’, ‘சிங்கப்பூர் சலூன்’ போன்ற பல திரைப்படங்களை உள்பட மொத்தம் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாளை வெளியாகும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக சுகுமார் பணியாற்றியுள்ளார். அதோடு, இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

இத்திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்கியுள்ளார். கதாநாயகனாக விமல் நடித்திருக்கிறார். நாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News