பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சி நடிகையான தீபிகா கக்கர், சில திரைப்படங்களில் நடித்ததுடன், இசை ஆல்பங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். தற்போது, தனது இரண்டாவது கணவரான சோயப் இப்ராஹிமுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ருஹான் என்ற மகள் உள்ளார்.

தீபிகா, கடந்த சில நாட்களுக்கு முன் தனது கணவரும் குழந்தையுடனும் சேர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா பயணமாகச் சென்றார். அங்கு எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்தார்.
இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடைபெற்ற இடத்தில், அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருந்தார். அவர்கள் தங்களது திட்டத்தை முன்வைத்து அந்த இடத்திலிருந்து வெளியேறியதால், தீபிகா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தீபிகா கூறும் போது, “இந்த சம்பவம் நடக்க சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அந்த இடத்தைவிட்டு நாங்கள் புறப்பட்டு வந்தோம். இந்த நிகழ்வால் மனதில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளோம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, தீபிகா – சோயப் தம்பதியினர் தங்களது காஷ்மீர் சுற்றுலாவை உடனடியாக முடித்து மும்பைக்கு திரும்பி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு, திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.