சக்திமான், தியா அவுர் பாதி ஹம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் நூபுர் அலங்கார். மேலும், பல பாலிவுட் திரைப்படங்களிலும் வில்லி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வந்த இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிஎம்சி வங்கி மோசடியில் தனது சேமிப்புப் பணத்தைக் கடந்துவிட்டார்.

அதன்பின், தாயாரும் சகோதரியும் மறைவடைந்ததால், வாழ்க்கை மீதான ஆர்வத்தை இழந்த அவர், தன்னுடைய நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக விட்டு விலகி ஆன்மிக வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.
தற்போது ‘பீதாம்பரா மா’ என்ற ஆன்மிகப் பெயரில் இமயமலைப் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு மிக எளிய வாழ்க்கை முறையில், குறைந்த உடை அணிந்து பிச்சை எடுத்து உணவுண்டு, குகைகளிலும் தொலைதூர மலைப்பகுதிகளிலும் தங்கி வருகிறார். “உலக வாழ்க்கையின் அழுத்தங்களும், பொருளாதாரப் பயங்களும் இல்லாததால், நான் தற்போது மிகுந்த அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழ்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

