தமிழில் சிம்பு நடித்த “ஈஸ்வரன்” மற்றும் ஜெயம்ரவி நடித்த “பூமி” ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தற்போது தெலுங்கில் பிரபல நடிகையாக நடித்து வரும் இவர், பிரபாஸ் நடிக்கும் “ராஜா சாப்” மற்றும் பவன் கல்யாணின் “ஹரிஹர வீரமல்லு” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபரால் தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை சந்தித்து வருவதாக நிதி அகர்வால் கூறியுள்ளார். இதற்கான காரணமாக, அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், குறித்த நபர் தன்னை கொலை மிரட்டல் விடுத்ததுடன், தனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் தரக்குறைவான செய்திகளை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.சமீபத்தில் மலையாள நடிகை ஹனிரோஸ் தன் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றியும் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.