ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள ‘வார் 2’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், ஹிருத்திக் ரோஷனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கியாரா அத்வானி தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.

கியாரா அத்வானி தனது எக்ஸ் பக்கத்தில், “ஹிருத்திக், உங்களுடன் திரையினை பகிர்ந்து நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ஆதி சார், அயன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மற்ற அற்புதமான குழுவினர் ‘வார் 2’ திரைப்படத்திற்கு உயிரூட்டிய வகையில் செய்த செயல்களை உலகம் விரைவில் பார்க்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.பாலிவுட்டில் மிக முக்கியமான ஸ்பை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள ‘வார் 2’ திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.