மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்களாலும், இயக்குநர்களாலும் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார். ஆனால் அவர் கதைகளை மிகவும் செலக்ட்டிவாக தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில், அவருக்கு ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனரின் அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததாக தகவல் வெளியானது அது டாம் குரூஸ் நடிக்கும் படமாகவும் இருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார். ஏன் அதில் நடிக்கவில்லை என்பதைப் பற்றி பஹத் பாசில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு இயக்குநருடன் வீடியோ காலில் பேசினேன். அவரை நான் அதிகம் இம்ப்ரஸ் பண்ணவில்லை என்று நினைக்கிறேன், குறிப்பாக என் ஆங்கில உச்சரிப்பால். மேலும், அவர் ‘இந்த படத்திற்காக நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டும், ஆனால் சம்பளம் கிடையாது’ என்று கூறினார்.
அவரது பேச்சிலேயே அவர் தேடிக்கொண்டிருப்பது நான் அல்ல என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. எனவே எந்த தயக்கமும் இன்றி அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன். அதோடு அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வலுவான உந்துதலும் எனக்குள் தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.