Monday, February 10, 2025

விடாமுயற்சியில் மிஸ் ஆன அனைத்தும் குட் பேட் அக்லியில் இருக்கு – ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அவருடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், மேலும் ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலானது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில், ‘விடாமுயர்ச்சி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் சில ரசிகர்கள், அந்தப் படத்தில் அஜித்தின் மாஸ் சீன்கள் குறைவாக இருக்கின்றன எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கான பதிலளிக்கையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சண்டை இயக்குனர் சுப்ரீம் சுந்தர் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். “விடாமுயர்ச்சி படத்தில் மாஸ் காட்சிகள் இல்லை என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆனால் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவர்கள் மிஸ் செய்த அனைத்தையும் 10 மடங்கு அதிகமாக அனுபவிக்கலாம்.

இந்தப் படத்திற்குச் செல்லும்போது, விக்ஸ் மற்றும் ஹால்ஸ் தேவைப்படும், ஏனெனில் படத்தில் தொடக்கம் முதல் முடிவு வரை நிறைய வாவ் மொமன்ட்ஸ் இருக்கின்றன. நீங்கள் திரையரங்கில் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பீர்கள், உங்கள் தொண்டைக்கே வலி வந்துவிடும்!” எனக் கூறினார். இந்த தகவல்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, அவர்களை உற்சாகத்துடன் காத்திருக்கச் செய்துள்ளன.

- Advertisement -

Read more

Local News