கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி மற்றும் நடிகையுமான பவித்ரா கவுடா உட்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யும் அதிரடி தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதுகுறித்து நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், நேற்று சுப்ரீம் கோர்ட், ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் மற்றும் பிறரின் ஜாமீனை ரத்து செய்து ஒரு வலுவான செய்தியை வழங்கியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
பிறருக்கும் நான் கூற விரும்புவது – நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். நீதி நிலைநாட்டப்படும். முக்கியமாக, உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.