நடிகை தமன்னா நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான “அரண்மனை 4” திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்த ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அவர் ஒரு தெலுங்கு திரைப்படம், ஒரு ஹிந்தி படம் மற்றும் ஒரு வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் தமன்னா சமீபத்தில் சில புகைப்படங்களும், வீடியோக்களும் பகிர்ந்து, அவற்றுடன் தத்துவ வசனங்களையும் பதிவிட்டுள்ளார். அதில், “இது ஒரு தேடல் நிலை. இதில் நீங்கள் பாதி வடிவமைப்பாளராகவும், பாதி சோதனையாளர் போலவும் இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு சிறிய விவரமும் முக்கியமானது, ஒவ்வொரு தவறும் ஒரு பாடமாகிறது. யோசனைகள் சிறு காகிதங்களில் வாழ்கின்றன. இது இன்னும் முழுமையடைந்து இல்லை, ஆனால் தனது பாதையில் நகர்கிறது. உண்மையைக் கூறவேண்டுமானால், இதுவே மந்திரம். ஒவ்வொரு பளபளப்பான பொருளுக்குப் பின்னாலும் ஒரு எளிமையான செயல்முறை உள்ளது. முடிவுகளும் சந்தேகங்களும் கலந்து இருக்கின்ற இந்தப் பகுதி தான்… அறிவும் குழப்பமும் கொண்ட, ஆனால் ஒருவிதமான உற்சாகத்துடனும் நிறைந்த நடுப்பகுதி” என பதிவு செய்துள்ளார்.