2002ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் தொடர்ந்து அதிகம் நடித்து வருகிறேன். அதனால் இந்தியாவையும், இந்திய சினிமாவையும் மிகவும் மிஸ் செய்கிறேன்.
இந்த சூழலில் ராஜமவுலி இயக்கும் மகேஷ் பாபு நடிக்கும் புதிய திரைப்படம் மூலம் மீண்டும் இந்திய படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஹாலிவுட்டில் பிஸியான நடிகையாக இருந்தாலும், இனி தொடர்ந்து இந்திய படங்களிலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.