குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான பிரீத்தி அஸ்ரானி, அயோத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் கவினுடன் கிஸ் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது எஸ்.ஜே. சூர்யாவுடன் கில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிருஷ்ண பலராம் இயக்கும் இந்த படத்தில், முகேன் ராவ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதுகுறித்து பிரீத்தி அஸ்ரானி, “நான் குஜராத்தில் பிறந்தாலும் தமிழ் சினிமாவைப் மிகவும் விரும்புகிறேன். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதே என் நோக்கம்” எனக் கூறினார்.

