‘குபேரா’ படத்திற்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம். இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, “’அனிமல்’ படத்தில் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் குறித்த எனது கருத்துகளை ஊடகங்கள் தவறாக எடுத்துக்கொண்டு சர்ச்சை உருவாக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அதிலும், “நான் சொல்கிற சாதாரண விஷயங்களையே தவறாக விளக்குகிறார்கள். சிலர் திட்டமிட்டு அதை சர்ச்சையாக்குகிறார்கள். நான் சொன்னது போன்று மாறுபட்ட கருத்துகளை இணைத்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்கிறார்கள்.
நான் சொன்னதற்கும் அவர்கள் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. என் பெயரால் அந்த கருத்துகளை இணைத்து விவாதத்திற்குள் இழுக்கிறார்கள். இதனையடுத்து, இனி ஊடகங்களில் எதைப் பேசுகிறேன் என்பது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன். எதிர்வினை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள் எதையும் இனி வெளிப்படுத்த மாட்டேன்” என்று கூறினார்.