2002ம் ஆண்டு ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரைமுகம் கொடுத்த திரிஷா, இன்றுவரை முன்னணி நடிகையாக தனது இடத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளார். அஜித்துடன் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) வெளியாகிறது. நடிகை திரிஷா சினிமாவில் ஹீரோயினாக 23 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ளார்.

அதே 2002ம் ஆண்டு திரிஷா ஹீரோயினாக அறிமுகமானபோது, சார்மியும் ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்ததோடு, சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
இந்த திரிஷாவும் சார்மியும் கடந்த 20 ஆண்டுகளாக சிறந்த தோழிகளாக இருக்கின்றனர். சமீபத்தில் இருவரும் மீண்டும் சந்தித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும், “20 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்கள் நட்பு உறுதியுடன் தொடர்கிறது” என்ற பதிவையும் அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.