மலையாள நடிகர் பிரித்விராஜ், இயக்குநராக அறிமுகமாகி, மோகன்லால் நடிப்பில் ‘லூசிபர்’ திரைப்படத்தை இயக்கினார். தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ உருவாகி வருகிறது. இதில், மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பலர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். இதை, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.
‘லூசிபர்’ திரைப்படத்தில், மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மர்மம் நிறைந்தவையாக இருந்தன. அவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, நட்பு எப்படி உருவானது போன்ற விஷயங்கள் விளக்கப்படவில்லை.
இந்நிலையில், ‘எம்புரான்’ திரைப்படத்தில், பிரித்விராஜ் நடித்துள்ள ‘சையத் மசூர்’ எனும் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது குறித்து, பிரித்விராஜ் கூறும்போது, “முதல் பாகத்தில் ‘லூசிபர்’ எழுப்பிய பல கேள்விகளுக்கான பதிலை, ‘எம்புரான்’ சொல்லும்” என தெரிவித்துள்ளார். மேலும், மோகன்லால் மற்றும் தனக்கிடையேயான முன்னணி கதையை இந்தப் படத்தில் விவரிக்கப் போகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.