தமிழில் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களைத் தொடர்ந்து கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ப்ரீ-புக்கிங் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை ரூ.1 கோடி க்கும் மேல் முன்பதிவு வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படமும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலகளவில் நடைபெற்று வரும் ப்ரீ-புக்கிங் மூலம் இதுவரை ரூ.25 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.