Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் பொன்ராம், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சண்முக பாண்டியன் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் சரத்குமார் நடுவில் அமர்ந்திருக்க, அவரது பக்கங்களில் துப்பாக்கியுடன் சண்முக பாண்டியன் நிற்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இப்படம் 1996-ஆம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை போன்ற பகுதிகளில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணி தொடங்கியுள்ளதாக படக்குழு ஒரு வீடியோவின் மூலம் அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News