Saturday, February 1, 2025

முதல் நீ முடிவும் நீ திரைப்பட கதாநாயகன் கிஷன் தாஸ்-க்கு டூம் டூம் டூம்… திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலம் பரிச்சயமான நடிகர் கிஷன் தாஸ், இதற்குப் பிறகு ‘நேர்கொண்ட பார்வை’, ‘சிங்க்’, ‘சிங்கப்பூர் சலூன்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ‘தருணம்’ திரைப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், படக்குழு புதிய வெளியீட்டு தேதியை திட்டமிட்டது, அதன் படி ‘தருணம்’ இன்று (ஜனவரி 31) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிஷன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும், இதன் மூலம் அவர் தனது சினிமா பயணத்தில் முக்கியமான தருணத்தை சந்தித்துள்ளார். அதேநேரத்தில், அவருடைய வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது.

ஆம், இன்று கிஷன் தாஸ் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது தோழி சுச்சித்ராவை மணந்துள்ளார். இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது, அதை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார். தற்போது, இவர்களின் திருமணம் இனிதே முடிந்துள்ளது, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News