பவித்ரா லட்சுமி தனது இஸ்ட்ராகிராமில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நான் கடுமையான உடல் நல பிரச்னைகளை சந்தித்தேன். இப்போது உடல்நிலை தேறி வருகிறேன். என்றாலும் பிரச்சினை இருக்கிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். திடீரென எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் இருக்கிறது.நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன், இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று , ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது கவலையளிக்கிறது. நான் நல்ல கைகளிலும் சரியான பராமரிப்பிலும் இருக்கிறேன்.எனது பெயரையும் நல்லெண்ணத்தையும் பணயம் வைத்து, உங்கள் பொழுதுபோக்குக்காக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கையும் எதிர்காலமும் இருக்கிறது. ஏற்கனவே இருப்பதை விட எனக்கு அதை கடினமாக்காதீர்கள். மேலும், தயவுசெய்து, உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ செய்யாத ஒன்றை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். இவ்வாறு பவித்ரா வீடியோவில் பேசி உள்ளார்.
