சமீபத்தில் கடந்த 21-ம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் நடித்த நாயகி கயாடு லோஹர் ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்துள்ளார். தற்போது, இளைஞர்களின் க்ரஷ் ஆக கயாடு லோஹர் மாறியிருக்கிறார்.

டிராகன் படத்திற்குப் பிறகு, தமிழில் ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுடன் ஜோடியாக கயாடு நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் செயலில் இருப்பவர் என்பதால், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதற்கிடையில், தனக்குத்தானே மீம்ஸ் உருவாக்கி, அதன்மூலம் தன்னை ப்ரொமோட் செய்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் சமீபத்தில் கயாடு லோஹர் மீது எழுந்தன. இந்த விவகாரத்தில், அவர் தனது விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், தன்னை ஆதரிக்கும் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றி என்றும், நெகட்டிவான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கயாடு கேட்டுக்கொண்டுள்ளார்.