தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், சிறந்த நடிகராகவும் பெயர்பெற்றவர் கவுதம் மேனன். தற்போது இவர் மம்முட்டியை வைத்து “டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இது அவரது முதல் மலையாள திரைப்படமாகும். இப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த சூழலில், ஒரு பேட்டியில் கவுதம் மேனன் கூறுகையில், “ஒரு படத்தைக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கவும் நல்ல கதை மட்டுமே போதுமானது. ரூ.100 கோடி செலவில் ஒரு படம் தயாரிப்பதற்குப் பதிலாக, ரூ.10 கோடி செலவில் பத்து படங்களை உருவாக்கலாம்.
பட்ஜெட்டில் அலைந்து பலியாகாமல் கதையின் தரத்தில் முழு கவனமும் செலுத்த வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.