தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸுடன் ஜோடியாக ‘தி ராஜாசாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில், கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார்-2’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், மலையாள திரையுலகில் மிகச் சிறந்த நடிகரான மோகன்லாலின் ஜோடியாக ‘ஹிருதயபூர்வம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில், 64 வயதுடைய மோகன்லாலுடன் 32 வயதான மாளவிகா ஜோடியாக நடித்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், “நடிகைகள் குறித்தும், அவர்கள் வயது அல்லது வயது வித்தியாசம் குறித்தும் முதலில் பேசுவதை நிறுத்தவேண்டும். சினிமாவில் ஒரு நடிகையின் திறமையை மட்டுமே மதிக்கவேண்டும்; அதற்குப் புறம்பான அர்த்தமற்ற விஷயங்களில் ஆர்வம் கொள்ளக்கூடாது,” எனக் கடுமையாகக் கூறியுள்ளார். மேலும், நேற்று தனது 32-வது பிறந்த நாளை மாளவிகா கொண்டாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.