Touring Talkies
100% Cinema

Saturday, October 25, 2025

Touring Talkies

பாலிவுட் சினிமா என்று அழைக்காதீர்கள் – பழம்பெரும் நடிகை ஜெயா பச்சன் வைத்த வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் சீனியர் நடிகையும், நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் பாலிவுட்டின் மிகப்பெருமை வாய்ந்த சினி ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஷாரூக்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து ஜெயா பச்சனிடம் வழங்கினார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தயவு செய்து நமது திரையுலகத்தை பாலிவுட் என்று அழைக்காதீர்கள் என்று பேசியுள்ளார். நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள், ஏன் பார்வையாளர்கள் கூட பாலிவுட் என்றே குறிப்பிடுகிறார்கள். இது பாலிவுட்டும் அல்ல, ஹாலிவுட்டும் அல்ல. தயவுசெய்து அப்படி குறிப்பிட வேண்டாம். இது ஹிந்தி – இந்தியன் திரை உலகம். அதற்கான மரியாதையை கொடுங்கள். திரையுலகில் 55 வருடங்களாக இருப்பவள் என்கிற முறையில் இந்த கோரிக்கையை நான் வைக்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

Read more

Local News