பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த வதந்திகள் சுற்றி பரவி வரும் நிலையில், படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்பதையும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்தத் தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது. அந்த வரைக்கும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த தவறான தகவல்களை பரப்பவோ அல்லது பகிரவோ கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியாக இணையத்தில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல. அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படும். அந்நேரம் வரைக்கும், உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிக முக்கியம்” என்று கூறப்பட்டுள்ளது.