தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஒரு காலத்தில் கவனம் பெற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பெரும்பாலும் பாலிவுட் படங்களிலேயே நடித்து வருகிறார்.

சமீப காலமாக நடிகைகளின் பெயரை பயன்படுத்தி, அவர்களது போலியான வாட்ஸ்அப் எண்களை உருவாக்கி மோசடி செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிதி ராவ், ஸ்ரேயா உள்ளிட்ட பல நடிகைகள் இதுபோன்ற அனுபவங்களை முன்வைத்துள்ளனர். தற்போது ரகுலும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வணக்கம் நண்பர்களே… யாரோ ஒருவர் என்னைப் போல் நடித்து வாட்ஸ்அப்பில் மக்களுடன் உரையாடி வருகிறார் என்று எனக்குத் தெரியவந்துள்ளது. அது எனது எண் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த விதமான உரையாடலிலும் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து அந்த எண்ணை ப்ளாக் செய்யவும் என்று கூறியதுடன், அந்த போலி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.

