மலையாள திரையுலகில் தற்போது அதிக படங்களை தன் கைவசம் வைத்துள்ளவர் நடிகர் நிவின்பாலி. ஏற்கனவே சில படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் நிவின்பாலி.

தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்த நிவின்பாலி, மலையாளத்தில் நயன்தாராவுடன் நடித்த ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ மற்றும் நடித்து வரும் ஹாரர் படம் ‘சர்வம் மாயா’ ஆகிய படங்கள் தொடர்ந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
சமீபத்தில் நிவின்பாலியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சர்வம் மாயா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதோடு, இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் ரிலீஸாகும் என அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகியாக ‘கண்ணப்பா’ புகழ் பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார், படத்தை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இயக்கி வருகிறார்.