நடிகை நயன்தாரா தனது 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவர் நடிக்கும் பல படக்குழுக்கள் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து கூறின. முதலில், அவர் கதாநாயகியாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ குழு அழகான போஸ்டரை வெளியிட்டது. பின்னர் ‘மண்ணாங்கட்டி’, ‘ஹாய்’, ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படக்குழுக்களும் போஸ்டர்களை வெளியிட்டன.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படம் குழுவும், அவர் ராணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற அறிவிப்புடன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியது. இந்த படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதால், அடுத்த ஆண்டு நயன்தாராவின் பல திரைப்படங்கள் வெளியாவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதே நேரத்தில், சிரஞ்சீவியுடன் ஒரு படம், யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’, ‘ராக்காயி’, ‘பேட்ரியாட்’ போன்ற படங்களிலும் அவர் நடித்துவருகிறார். மொத்தத்தில், தற்போது நயன்தாராவின் கைவசம் 9 படங்கள் உள்ளன.

