Wednesday, October 23, 2024

இப்போ புரியுதா, நான் ஏன் சிவா சாரை விடலனு? அஜித்குமார் குறித்து சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யம்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜா, இந்த படத்தை முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சிறுத்தை சிவா, நடிகர் அஜித்தின் விருப்பமான இயக்குநராக இருந்து வருகிறார். ‘வீரம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்களில் அஜித் – சிவா கூட்டணியில் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் வந்துள்ளன. ‘கங்குவா’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் படக்குழு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகர் அஜித்துடன் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“சமீபத்தில் அஜித் சாரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘இப்போ புரியுதா, நான் ஏன் சிவா சாரை விடல?’ என்று கேட்டார். சிவாவுடன் ஒருமுறை பணியாற்றினால், அவர் வேறொரு நடிகருடன் பணியாற்றுவது பொறாமைபட வைக்கும். அந்த அளவுக்கு படப்பிடிப்பு சந்தோஷமாக இருக்கும்,” என்று சூர்யா தெரிவித்தார்.’கங்குவா’ திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பான் இந்தியா அளவில் படத்தை பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News