குக் வித் கோமாளி சீசன் 6 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இதில், நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, செஃப் கெளஷிக் உள்ளனர். வழக்கம் மேல, இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். இதில் கோமாளியாக பிக் பாஸ் சவுந்தர்யா, குரேஷி, டாலி, புகழ், ராமர், சரத், சுனிதா, பூவையார், சர்ஜுன், பழைய ஜோக்கு தங்கதுரை இந்த சீசனுக்கான கோமாளிகளாக உள்ளனர். அதே போல குக்காக சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்திருந்த உமர் லத்தீப், நந்த குமார், செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, நடிகை மதுமிதா, சுந்தரி அக்கா, சௌந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் ராஜு ஆகியோர் குக்காக உள்ளனர்.
