தற்போதும் அதிக சம்பளத்தைப் பெறும் நடிகைகள் பெரும்பாலும் பாலிவுட்டிலிருந்தே இருக்கின்றனர்.இந்தியத் திரைப்பட துறையில், தீபிகா படுகோனே தற்போது 25 கோடிக்கும் அதிகமான சம்பளம் பெற்றுக் கொண்டு முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக, அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்குப் பிறகு கங்கனா ரணவத், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோரும் 20 கோடி வரை சம்பளம் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய திரைப்பட துறையில், திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் தற்போது 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். இவர்களுக்குப் பிறகு, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் 40 வயதைத் தாண்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகைகளில், ராஷ்மிகாவைத் தவிர அனைவரும் 30 வயதைக் கடந்துவிட்டனர். ராஷ்மிகா 30 வயதினை எட்டி வருகிறார்.தென்னிந்திய சினிமாவில் 20 வயதிற்கும் அதிகமான நடிகைகள் மிகக் குறைவாக உள்ளனர். புதியதாக அறிமுகமான சில நடிகைகள் வெறும் சில படங்கள் நடித்த பிறகு திரையுலகில் காணாமல் போய்விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.