Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

கின்னஸ் உலக சாதனை படைத்த டாம் குரூஸ்… என்ன செய்தார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். குறிப்பாக அவர் நடித்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படத் தொடருக்கு பெரும்பான்மை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலைமை காணப்படுகிறது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற டாம் க்ரூஸ் நடித்த இந்த தொடரின் எட்டாவது பாகமான ‘மிஷன்: இம்பாஸிபிள் – தி ஃபைனல் ரெக்கனி’ சில நாட்களுக்கு முன் வெளியானது.

உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இந்த திரைப்படம், இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்று வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘மிஷன்: இம்பாஸிபிள் – தி ஃபைனல் ரெக்கனி’ படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிக்காக டாம் க்ரூஸ் ஒரு முக்கியமான கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். குறிப்பாக, இந்தப் படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து 16 முறை ஜம்ப் செய்ததற்காக ‘ஒரே திரைப்படத்தில் இதனை அதிகமாக செய்த நடிகர்’ என்ற வகையில் அவர் இந்த சாதனையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News