தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், மஞ்சள் கயிறால் ஆன தாலியை மட்டுமே அணிந்து வந்தார்.
பொதுவாக திருமணத்தின் போது கட்டப்படும் மஞ்சள் தாலி, சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து தங்கத் தாலியாக மாற்றி அணிவது வழக்கம். ஆனால், கீர்த்தி சுரேஷ், சுமார் இரண்டு மாதங்கள் வரை மஞ்சள் கயிறு தாலியை மட்டுமே அணிந்து வந்தார். தற்போது, அவர் அந்த மஞ்சள் கயிறு அணிவதை நிறுத்தி விட்டார்.


மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவர் தங்க செயினை மட்டும் அணிந்து வந்தார். மஞ்சள் கயிறு தாலிக்கு பதிலாக, தங்கத் தாலியை மாற்றியுள்ளார் என்ற கருத்துகள் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவர் தங்கத் தாலியை அணியாமல் வருவதாக கூறப்படுகிறது. தற்போது, கீர்த்தி நடித்து வரும் நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸான ‘அக்கா’வில் அவர் அணிந்துள்ள தங்க செயினைதான் அந்த நிகழ்ச்சிக்கும் அணிந்து வந்துள்ளார்.