அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘டிராகன்’. இதில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, மேலும் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், இதுவரை ₹100 கோடிக்கும் அதிகமான வசூலை சம்பாதித்துள்ளது.இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தில் சிறப்பு விழா நடத்தப்பட்டது. இதில், ‘டிராகன்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது, ஓ மை கடவுளே திரைப்படம் வெளியானபோது, மகேஷ்பாபு அந்தப் படத்தை பார்த்துவிட்டு, தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பாராட்டினார். இதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள், உடனடியாக படம் பார்க்க ஆர்வமுடன் கொண்டாடத் தொடங்கினர். அதுபோலவே, ‘டிராகன்’ படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் இந்தக் கோரிக்கையை, ‘டிராகன்’ வெற்றி விழாவில் அவர் தெரிவித்தார்.