Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தி கோட் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (தி கோட்). இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும் முக்கியமான சாதனையை அடைந்துள்ளது.

கடந்த 3 ஆம் தேதி விஜய்யின் “தி கோட்” திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6 வரையிலான நேரத்தில், நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன், இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 455 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News