Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

உறுமீன் இயக்குனரின் ‘அலங்கு’ படத்தின் கதை என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டி.ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “அலங்கு” என்ற படத்தில் குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை “உறுமீன்” மற்றும் “பயணிகள் கவனிக்கவும்” ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர்.

தமிழ்நாடு – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ மற்றும் விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், புலம்பெயர்ந்த பழங்குடியினரின் வாழ்க்கை உள்ளிட்ட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தில் நாய் ஒரு முக்கிய கதாபாத்திரமாக செயல்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது, “நாய்களை நேசிப்போர் சமுதாயம் பெரிதாகவே இருக்கிறது. ஆனால், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் பாசம், ஒரே ஒரு சம்பவத்தின் காரணமாக பகையாக மாறுவது, அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் மையமாக இருக்கும். படத்தின் 95 சதவீத காட்சிகளையும் அடர்ந்த காடுகளில் படமாக்கியுள்ளோம். அது இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News