ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கானுடன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் ‘சிக்கந்தர்’. இந்த படம் மார்ச் 30ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களிடம் கேள்வி-பதில் அமர்வில் கலந்து கொண்டார் ராஷ்மிகா. அப்போது, அவரது காலில் ஏற்பட்ட காயம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோது, “தற்போது காயம் நன்றாக குணமாகி வருகிறது. ஆனால் முழுமையாக குணமடைய இன்னும் ஒன்பது மாதங்கள் ஆகும்” என்று பதிலளித்தார் ராஷ்மிகா.

அதனைத் தொடர்ந்து, “உங்கள் அழகின் ரகசியம் என்ன?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் என் மேனியை நன்றாக பராமரிக்கின்றேன். அதோடு, உண்மையான, மனதிலிருந்து வரும் நல்ல எண்ணங்கள் மற்றும் மனமகிழ்ச்சி ஆகியவை என் சருமத்திற்கு சிறந்த தோல் மருத்துவர்களாக செயல்படுகின்றன” என கூறினார்.
மேலும், “என் அழகுக்கான உண்மையான காரணம் என் அப்பா-அம்மாவின் ஆசீர்வாதம் மற்றும் அவர்களிடமிருந்து வந்த நல்ல மரபணுக்கள் தான்” என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தற்போது அவருக்கு இன்ஸ்டாகிராமில் 45 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.