லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கூலி முதல் நாளிலேயே பெரிய வசூலை ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படம் இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 – 5000 திரைகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
