பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷ்ராப் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடிக்கும் ஆக்சன் திரைப்படமாக ‘பாகி 4’ உருவாகியுள்ளது. இந்த படத்தை சாஜித் நதியாட்வாலா எழுதி தயாரித்திருக்கிறார். படத்தை ஹர்ஷா இயக்கியுள்ளார். படத்தில் ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா, ஷ்ரேயாஸ் தல்பதே, சௌரப் சச்தேவா, உபேந்திர லிமாயே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பாகி 4’ நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று, நாளை விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘பாகி 4’ படம் ரூ.13.20 கோடி வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
