கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஷ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் ‘மிராய்’. இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக 27 கோடியே 20 லட்சம் வசூலாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.தேஜா சஜ்ஜா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ‘ஹனுமன்’ படம் முதல் நாளில் 23 கோடியே 50 லட்சம் வசூலித்திருந்தது. அந்த சாதனையை தற்போது ‘மிராய்’ படம் முறியடித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
