Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அஜித் எப்படி உடல் எடையை குறைத்தார் தெரியுமா? ஆரவ் சொன்ன அந்த சீக்ரெட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித்குமார் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகர் ஆரவ், சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் அஜித்குமார் உடல் எடையை குறைத்த விதம் குறித்து தகவல் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘‘உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, விடாமுயற்சி படப்பிடிப்பின்போதே அஜித் அசைவ உணவுகளை முழுவதுமாக தவிர்த்துவிட்டார். அவர் முழுக்க சைவ உணவுகளை மட்டுமே அளவோடு எடுத்துக்கொண்டார். இதன் விளைவாகவே அவரது உடல் எடை வேகமாக குறைந்தது. ஆனால், படப்பிடிப்பின்போது எங்களுக்கு அவ்வப்போது அசைவ உணவுகளை சமைத்து கொடுக்க அவர் தவறியதில்லை.’’

- Advertisement -

Read more

Local News