இந்தியாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, தற்போது பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில், தனது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடியபோது, மனச்சோர்வு குறித்து ஒருவர் கேட்டதற்கு நடிகை ஸ்ரீலீலா பதிலளித்துள்ளார்.

அதற்கு அவர், “உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை கட்டிப்பிடியுங்கள், இசையை கேளுங்கள். இது எவ்வளவு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் செய்யும் முறையே இதுதான்” என்று பதிலளித்தார்.
தற்போது பவன் கல்யாணுடன் “உஸ்தாத் பகத்சிங்” படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம், தமிழில் “பராசக்தி” படத்திலும், கார்த்திக் ஆர்யனுடன் பாலிவுட் படத்திலும் நடிக்கிறார். மேலும், ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள “மாஸ் ஜாதரா” படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.