முன்னணி நடிகையாக வலம் வரும் கஜோல், சமீபத்தில் மகாராஷ்டிரா அரசால் நடத்தப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது விழாவில் தனது தாய், நடிகை தனுஷாவுடன் கலந்து கொண்டார். கலைத்துறையில் அவர் வழங்கிய முக்கியமான பங்களிப்பு மற்றும் இந்திய சினிமாவுக்காக செய்த சேவையை பாராட்டும் வகையில், அந்த விழாவில் கஜோலுக்கு சிறப்பு மரியாதையாக ‘ராஜ்கபூர்’ விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பின், கஜோல் அந்த விழாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் அவர் பதிலளித்தார். அப்போது அங்கு இருந்த ஒருவர், “இந்தியில் பேசுங்கள்” எனக் கேட்டபோது, கஜோல் அதற்கு,
“இப்பொழுது நான் கட்டாயமாக இந்தியில் பேச வேண்டுமா? நான் பேசிய மொழியில் புரிய வேண்டியவர்களுக்கு அது நன்றாகவே புரிந்திருக்கும் என தெரிவித்துவிட்டு, அவர் அந்த இடத்திலிருந்து உடனே நகர்ந்தார். இந்தச் சம்பவம் இடம்பெற்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.