2016 ஆம் ஆண்டில் தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடித்த “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் “மான்ஸ்டர்” மற்றும் “பர்ஹானா” போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பைப் பெற்றார். தற்போது நெல்சன் வெங்கடேசன் நடிகர் அதர்வா நடிப்பில் “டிஎன்ஏ” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு கவனம் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.