Tuesday, October 29, 2024

கங்குவா படத்தில் யோலோ பாடலுக்காக 21 ஆடைகளை மாற்றிய திஷா பதானி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை திஷா பதானி பாலிவுட்டில் பிரபலமான கதாநாயகியாக வலம் வருபவர். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பேண்டஸி கலந்த சரித்திர படமாக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி இதற்கான புரோமொசன் நிகழ்ச்சிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ‘யோலோ’ எனும் பாடலை நான்கு நாட்கள் படமாக்கியுள்ளனர். இந்த ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் திஷா பதானி 21 ஆடைகளை மாற்றி மாற்றி அணிந்து நடனம் ஆடி உள்ளாராம்.

- Advertisement -

Read more

Local News