Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

தனக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த நடிகர் கிங் காங்-க்கு பட வாய்ப்பு கொடுத்து ஆனந்தத்தில் ஆழ்த்திய இயக்குனர் டி ராஜேந்தர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர் கிங்காங், திரையுலகில் இருப்பவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். அவ்வகையில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்திரனுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.அப்போது திருமண அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட டி.ராஜேந்திரன், “உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் என் படத்தில் நடித்ததில்லை. நான் படம் ஒண்ணு ஆரம்பிக்கிறேன்.அதுல சின்ன கதாப்பாத்திரம் ஒண்ணு இருக்கு. அதுல நீங்க நடிக்கணும்” என்று தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். இதை நடிகர் கிங் காங் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News